48 வயது ஆசிரியை ஒருவரை 22 வயதான மாணவன் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
மலேசியாவின் பெல்டா ஏர் டவார் பகுதியை சேர்ந்தவர் முகமது டேனியல் அகமது அலி(வயது 22) என்ற மாணவருக்கும் , ஜமிலா என்ற ஆசிரியைக்குமே திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல ஆண்டுகள் தொடர்பில்லை
ஜமிலாவின் குணமும், மாணவர்களுக்கு கனிவுடன் சொல்லிக்கொடுக்கும் விதமும் முகமது டேனியலை கவர்ந்துள்ளது. எனினும் ஜமிலா மீது மரியாதை கலந்த அன்பு மட்டுமே அவருக்கு இருந்தது.
எனினும் பல ஆண்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் போகவே ஒருநாள் ஏதேச்சையாக ஜமிலாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மெல்ல மெல்ல இருவரும் பேசத் தொடங்கிய பின்னர், ஜமிலா மீது முகமது டேனியல் காதல் வயப்பட்டுள்ளார் .

ஆனாலும் வயதை காரணம் காட்டி ஜமிலா நிராகத்துள்ளார், தன்னை விட 26 வயது இளையவரை திருமணம் செய்து கொள்ள ஜமிலா ஒப்புக் கொள்ளவில்லை.
இருப்பினும் முகமது டேனியல் தொடர்ந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார் , வேறு வழியின்றி ஒருகட்டத்தில் அவரது காதலை ஜமிலா ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து இரு குடும்பத்தினரின் அனுமதியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது டிரெண்டாகி வருகிறது.