மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற 15 வயது மாணவன் கைது

0
569

ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த 15 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கந்தானை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் 15 வயதுடைய மாணவன் ஒருவன் தனியார் வகுப்பு ஒன்றிற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 போதைப்பொருள் விற்பனை

கந்தானை தெற்கு படகம பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஒன்றிற்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி கைது செய்யப்பட்ட மாணவனுக்கு போதைப்பொருளை வழங்கிய நபர் யார் என்பது குறித்து கால்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.