சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் படுகொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன்! பெண் காப்பாளர் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் தகவல்

0
269

கல்முனையில் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 14 வயதான சிறுவன், விக்கெட் கம்புகள் மற்றும் தும்புத்தடியால் தாக்கி, படுகொலைச் செய்த சம்பவம் ஒன்று சமீபத்தில் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் காப்பாளருக்கு எவ்விதமான தொழில் தகுதியும் இல்லை என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

​பெண் காப்பாளர், வீதியில் செல்லும் ஒருவரா? என தேடிப்பார்த்த ​போது, அவர் எந்தவொரு பரீட்சையிலும் சித்தியடையாதவர் என்றும் தொழில் தகுதி இல்லாதவர் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர் நன்னடத்தை பாடசாலை பெண் காப்பாளர் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் அதிர்ச்சித் தகவல் | Kalmunai Childrens Probation School Boy Died

நாட்டில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு மிகவிரையில், பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.