இலங்கையில் தவறுதலாக மீட்கப்படும் சிறுத்தை குட்டிகள்..

0
238

இலங்கையில் சிறுத்தை குட்டிகளை மனிதர்கள் தவறுதலாக மீட்க முயற்சிக்கின்றனர் என விலங்கியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சிறுத்தைகள் அவற்றின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாக விலங்கியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் விலங்கியல் நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொதுவாக தாய் சிறுத்தைகள், தங்கள் குட்டிகளை வேட்டையாடச் செல்லும்போது அல்லது இடமாற்றம் செய்யும் போது அவற்றை மறைத்துவிட்டு செல்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கை

எனினும் இலங்கையின் மத்திய மலைநாட்டில், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் குறித்த சிறுத்தை கைவிடப்பட்டதாகவோ அல்லது தொலைந்துவிட்டதாகவோ கருதி அந்தக் குட்டிகளை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இலங்கையில் தவறுதலாக மீட்கப்படும் சிறுத்தை குட்டிகள்: விலங்கியல் நிபுணர்கள் விடுத்துள்ள அறிவுறுத்தல் | Leopard Cubs Being Rescued By Mistake In Sri Lanka

இந்த செயல் நல்ல எண்ணம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படுகின்றபோதும், இறுதியில் சிறுத்தை குட்டிகள், அவற்றின் தாயிடமிருந்து பிரிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக எமது நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுத்தைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றை கிராம மக்கள், குறிப்பாக மத்திய மலைப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள், வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார்கள்.

நிபுணர்களின் அறிவுறுத்தல்

இந்த செயற்பாடு பொதுமக்களால் முழு மனதுடன் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், சிறு சிறுத்தை குட்டிகள் கண்டுபிடிக்கப்படும் போது குறித்த சுற்றுப்புறங்களை சரியான மதிப்பீடு இல்லாமல் குட்டிகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் தவறுதலாக மீட்கப்படும் சிறுத்தை குட்டிகள்: விலங்கியல் நிபுணர்கள் விடுத்துள்ள அறிவுறுத்தல் | Leopard Cubs Being Rescued By Mistake In Sri Lanka

பெரும்பாலும், சிறுத்தை தாய் தனது குட்டிகளை சிறிய மறைவிடங்களில் விட்டுவிட்டு வேட்டையாடச் செல்லும் சந்தர்ப்பங்களிலேயே இந்த குட்டிகள் கண்டறியப்படலாம்.

எனவே சிறுத்தைக் குட்டிகள் உயிர்வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பு அவற்றின் தாய்மாரின் வழிகாட்டுதலில் உள்ளது என்பதால், குட்டிகள் எங்கு கண்டறியப்படுகின்றவோ அந்த இடத்திலேயே அவற்றை விட்டுச்செல்வது சிறந்தது என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.