சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் சீடராக சென்ற சகோதரிகளான இரண்டு பெண்களையும் மீட்டுத்தரக்கோரி அவரது தந்தையின் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
நே்ற்று முன்தினம் இந்த வழக்கு நீதிபதி உமேஷ் திரிவேதி அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண் சகோதரிகள் ஏன் இந்திய தூதரகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் பேச விரும்பவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லை
இதற்கு அந்த பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தந்தையைப் பார்த்து அந்தப் பெண்கள் பயப்படுவதாகவும் அப்படி ஆஜராகும் பட்சத்தில் அவர்களது முகவரியை கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இதற்கு நீதிபதி, “குற்ற உணர்வினால் தான் அந்த சகோதரிகள் விசாரணைக்கு ஆஜராகவில்லை” என கூறினார்.
அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசின் வழக்கறிஞர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஜமைக்காவுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லை. ஆனால் சட்ட உதவிக்கான ஒப்பந்தம் உள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, பெண் சீடர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு கண்டறிய வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நாட்டை விட்டு ஓடிய நித்தியானந்தா
தமிழகத்தைதின் மதுரையை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸாரால் தேட்டப்பட்டு வந்த நிலையில் நாட்டிவிட்டு தப்பியோடினார்.
அதன் பின்னர் கைலாசா எனும் நாட்டை உருவாக்கியதாக பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா அவ்வப்போது காணொளிகளில் தோன்றி தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகின்றார்.