காதலி இறந்த விரக்தியில் காதலன் தற்கொலை!

0
239

பலாங்கொடையில் காதலி இறந்து சில நாட்களின் பின்னர் தன்னால் வாழ முடியாது என இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த நபர் பலாங்கொட வெலிகேபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த இளைஞனின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனமுடைந்து கடும் விரக்தியுடன் பொழுதை கழித்து வந்த இளைஞன் காதலியின்றி தன்னால் வாழ முடியாது என கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையும் பதிவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.