இந்தியா உதவியுடன் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கை!

0
211

இந்தியாவின் உதவியால் இலங்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்த்துள்ளதாக இலங்கையின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற விஜயதாச ராஜபக்ச செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதுடன் இலங்கை புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.

இந்தியாவின் உதவியால் கடும் பொருளாதார நெருக்கடியில் மீண்ட இலங்கை! நீதியமைச்சர் விளக்கம் | Srilanka Political Crisis India Help

பொருளாதார நெருக்கடி

இதன்போது, பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த நாட்டை மீட்க இலங்கை, இந்திய அரசிடம் உதவி கேட்டது. இதையடுத்து, இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது.

இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த இலங்கை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

அத்துடன் மோடி தலைமையிலான இந்திய அரசின் உதவியால் இலங்கை பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துவிட்டதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.