இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கிய பிரபல ஹிந்தி நடிகர்

0
261

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் லங்கா பிரீமியர் லீக்கில் பிரபல ஹிந்தி நடிகர் முதலீடு செய்துள்ளார்.

அணியொன்றை கொள்வனவு செய்துள்ளதாக பிரபல பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் அறிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியான அறிவிப்பு

B-Love Kandy என்ற கண்டி அணியின் உரிமையில் உள்ள தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

“2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் நானும், எனது சகோதரர்களான உமர் கான் மற்றும் எச்.எச். ஷேக் மர்வான் பின் மொஹமட் பின் ரஷித் அல் மக்டுமுடன் இணைந்து B-Love Kandy கிரிக்கெட் அணியை வாங்கியுள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் பதிவிட்டுள்ளார்.