கனடா பிரதமரின் கருத்தை நாங்கள் முற்றிலும் எதிர்கின்றோம்!.. கொந்தளிக்கும் பெண்

0
216

கனடா பிரதமர் மே 18 ஆம் திகதியை தமிழின அழிப்பு நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என கூறிய கருத்தை நாங்கள் முற்றிலும் எதிர்க்கின்றோம் என தேசத்தை கட்டியெழுப்பும் நல்லிணக்கத்திற்கான இயக்கத்தின் செயலாளர் ஹாஷியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“கனடா பிரதமரின் கருத்தை நாங்கள் முற்றிலும் எதிர்கின்றோம். ஏனெனில் இலங்கையில் அவ்வாறானதொரு இன படுகொலை இடம்பெறவே இல்லை.

இடம்பெறாத ஒரு இனப்படுகொலைக்கு ஒரு நாளை ஒதுக்குவது எமக்கு பிரச்சினையாக உள்ளது.

30 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் எமது இலங்கை மக்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

அப்படியான சூழலில் இருந்து இராணுவ வீரர்கள் தான் எமது நாட்டை மீண்டும் எமக்கு கைப்பற்றி கொடுத்தார்கள்.” என கூறியுள்ளார்.