கொழும்பில் பாடசாலை மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

0
188

கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலைக்கு செல்லும் மாணவிகளிடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் நடத்துனர்களால், மாதாந்த பருவச் சீட்டிற்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் தகவல் கசிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மட்டக்குளியிலிருந்து கல்கிஸ்சை வரை இயங்கும் 155 இலக்க பேருந்து கோவிட் தொற்றுக்கு முன்னதாக அதிகளவு பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் பயன்படுத்துவதாக இருந்தது.

இந்த நிலையில் திடீரென குறித்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு ஓரிரு பேருந்துகளே இயங்குகின்றன.

எனினும் இந்த பேருந்துகள் இன்மை காரணமாக பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு கள ஆய்வொன்றை செய்திருந்தது.