எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகை வாசிப்பவர்களை போன்றவர்- அமைச்சர் காஞ்சனா

0
191

தொலைக்காட்சியில் காலையில் பத்திரிகைகளை வாசிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படி நடந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என பத்திரிகையை வாசிக்கும் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். எனினும் பொறுப்பை வழங்கினால் முடியாது. எதிர்க்கட்சி தலைவரும் அப்படியே.

நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவே எதிர்க்கட்சிக்கு ஆலோசனைகளை வழங்குகிறார். அவரிடம் ஆலோசனைகளை பெற்றால், கோட்டாபயவுக்கு நடந்ததே எதிர்க்கட்சி தலைவருக்கும் நடக்கும்.

கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு பொறுப்பை வழங்காது ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியதால் நாடு ஒரு ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளது என காஞ்சன விஜேசேகர மேலும் கூறியுள்ளார்.