இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

0
256

2006ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 17 பிரான்ஸ் உதவி நிறுவன (ACF) செயற்பாட்டாளர்களின் படுகொலைக்கு இன்றுவரை நீதி வழங்காமல் இருக்கும் நிலையில் அதற்கான விசாரணைக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தும்படி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடிதமொன்றின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச குற்றங்கள்

குறித்த கடிதத்தில் மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான் கீ மூனால் சார்லஸ் பெட்றியின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் 70,000 பொது மக்கள் கொல்லப்பட்டதும் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் நடைபெற்றமைக்கு நம்மத்தகுந்த சாட்சியங்கள் இருந்தமையையும் சுட்டிக்காட்டி அத்துடன் பேர்லின் மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை தமிழ் மக்களிற்கு எதிராக நடைபெற்றது என்பதையும் சுட்டிக்காட்டி இந்த சர்வதேச குற்றங்களைப் புரிந்த எவருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Tgte Letter To France President About Sri Lanka

சர்வதேச நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இச்சர்வதேச குற்றங்களுக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை 30/1 தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு நீதிப்பொறிமுறை காத்திரமான ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹீசைன் தனது 2015ஆம் ஆண்டு அறிக்கையிலும் கடந்த வாரம், இம் மாதம் நடைபெற இருக்கின்ற இலங்கை தொடர்பான உலகளாவிய கால ஆய்வு (universal periodic review) தொடர்பாக லக்ஸம்பேர்க், போட்ஸ்வானா, ஈக்வடர், கிழக்குத் தீமோர் ஆகிய நாடுகள் இலங்கை ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி உள்ளதையும் இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை

அத்துடன் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை பின்னோக்கி (retro active) ஏற்றுக் கொள்ளும்படி அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Tgte Letter To France President About Sri Lanka

அவ்வாறு இலங்கை பின்னோக்கி (retro active) நியாயாதிக்கத்தை ஏற்றுக் கொள்வது, 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரான்ஸ் நிறுவன செயற்பாட்டாளர்களின் படுகொலைக்கும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 70,000 பொது மக்களுக்கும் நீதி வழங்குவற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியப் பிரச்சினை பொது வாக்கெடுப்பு மூலமே தீர்க்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையும் இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் New Caledoniaவில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தியமைக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு பாராட்டு தெரிவித்து, பொதுசன வாக்கெடுப்பின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | Tgte Letter To France President About Sri Lanka

மேலும், இலங்கையின் 6வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம், அமைதி முறையில் தனிநாடு கேட்பதை தடை செய்வது சுதந்திரத்திற்கு முரணானது என்றும், தமிழ் மக்கள் தமது அரசியல் பெரு விருப்பினைத் தெரிவிப்பதற்கான அரசியல் வெளியை முடக்குவதையும் சுட்டிக்காட்டி 6வது அரசியல் அமைப்பு சட்டத்தை நீக்கும்படி கோருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அதே சமயம் Paris Club இற்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இலங்கையின் கடன் மீள் சீரமைப்பையும், மேலதிக நிதி உதவியையும் இலங்கையின் இராணுவ செலவீனங்களை குறைப்பதும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக் கூறலையும் இணைக்கும்படி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.