தலைமன்னாரில் கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்பு

0
206

தலைமன்னார் – ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரர் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக தலைமன்னார் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி – கோனாபினுவல பிரதேசத்தில் வசிக்கும் தினேஷ் மதுஷான் ஜயசேகர என்ற 31 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தலைமன்னாரில் கடற்படைச் சிப்பாய் சடலமாக மீட்பு | Navy Soldier Death In Mannar

குறித்த சிப்பாய் நேற்றுக் காலை (21.06.2023) பணிக்கு வராததால் கடற்படையின் அதிகாரிகள் அவரை அழைத்துவர அவர் தூங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர்.

இருந்தும் குறித்த சிப்பாய் எழுந்திருக்காததால் அவரை பரிசோதித்த போது ​​அவர் இறந்து கிடந்தது கண்டு பொலிஸில் முறையீடு செய்யப்பட்டது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது என்று தலைமன்னார் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.