பெண் அரச அதிகாரிக்கு ஆபாசப்படம் அனுப்பிய நபர்!

0
264

ஓய்வு பெற்ற பெண் அரச நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பிய 48 வயதான நபர் ஒருவரை வெயங்கொடை பொலிஸார் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதுளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் பெண் அதிகாரி பதவியில் இருந்தபோது அவரின் உத்தியோகபூர்வ வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்