ஆயுதத்தை கையில் ஏந்தி அரசியலில் ஈடுபடும் சரத் வீரசேகர! – முன்னாள் எம்பி திலகராஜ்

0
219

ஆயுதம் ஏந்திய சரத் பொன்சேகா ஆயுதம் இல்லாத அரசியலுக்கான முனைப்பை காட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை அடைந்து கொள்வதற்கு பின்பற்றுகின்ற வழிகள் வெவ்வேறானவையாக இருப்பதன் காரணமாக அவர் காணும் கனவு வெகு தூரத்திலேயே இருக்கிறதாகவும் திலகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தொடர்ச்சியாக ஒரு ஆயுதத்தை கையில் எடுத்த வண்ணமே தனது அரசியல் பயணத்தை முன்கொண்டு செல்ல நினைக்கிறார்.

இனவாதம் என்பது தொடர்ச்சியாக நல்ல வழியினை காட்டுவதற்கு பொருத்தமாக இருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.