வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள புராதனச் சின்னங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களை நிரூபிக்க குருந்தி செல்லவுள்ளதாக பிவித்துரு ஹெல உருமவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குருந்தி தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைத்த கருத்தை நிரூபிப்பதற்காக தானும் கட்சிப் பிரதிநிதிகள் குழுவும் எதிர்வரும் 21ஆம் திகதி குருந்தி செல்ல தீர்மானித்ததாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கில் அமைந்துள்ள வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் விளக்கம்
வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும், அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆய்வாவளர் வண. கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
