தொல்லியல் பின்னணியுடன் தொடர்புடைய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: இரா. சாணக்கியன்

0
227

தொல்பொருள் செயலணியில் பின் இருந்து நிதி வழங்கி இராணுவ தளபதிகளை கொண்டு செயற்பட்ட மூல காரணமான அமைச்சர் விதுர விக்கரம நாயக்காவை பதவியில் இருந்து ஜனாதிபதி விலக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு ஊடக மையத்தில் நேற்று (14.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் என்ற பெயரிலே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். அபிவிருத்தி என்ற பெயரிலே கடந்த 3 வருடங்களாக இந்த மாவட்டத்திலே எந்தொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை நடக்கின்ற கூட்டங்களில் அதிகாரிகளை அச்சுறுத்துவதும் தங்களது நிகழ்சி நிரலுக்குள் வராத அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் பேசுவது தான் மாவட்டத்தில் சில வருடங்களாக நடக்கின்றது.

தொல்பொருள் பின்னணியுடன் தொடர்புடைய அமைச்சரை பதவிவிலக்க வேண்டும்: இரா.சாணக்கியன் | Minister Archaeological Should Sacked Shanakiyan

பேசப்படும் ஒரே விடயம்

அதேவேளை பேசப்படும் ஒரே விடையத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

எதிர்கால தீர்வுவை நாடாளுமன்ற உறுப்பினரான நான் முன்வைத்தாலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தையில் காணி தொடர்பாக தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். அதில் வன பரிபாலன திணைக்கள் 1985 ம் ஆண்டு வரைபடத்திற்கு சென்றால் வடகிழக்கிலுள்ள வன பரிபாலன திணைக்களத்தின் கீழ் உள்ள காணி பிரச்சினைக்கு முடிவு வரும்.

இதேவேளை குடும்பிமலையில் தொல்பொருளால் கட்டிடம் கட்டுவதை நிறுத்துமாறு தெரிவித்தபோதும் அவர் கூட்டத்திற்கு வருவதில்லை.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கூட்டத்தில் தொல்பொருள்; பணிப்பாளர் மல்லைத்தீவு மாவட்டத்தில் டிதால்பொருளுக்காக ஒதுக்கிய காணியை விடுவிப்பதற்கு தான் பின்வாங்கி அனுப்பமுடியாது என தெரிவித்தபோது ஜனாதிபதி இராஜனாமா கடிதத்தை தருமாறு வாங்கியிருந்தார்.

தொல்பொருள் பின்னணியுடன் தொடர்புடைய அமைச்சரை பதவிவிலக்க வேண்டும்: இரா.சாணக்கியன் | Minister Archaeological Should Sacked Shanakiyan

ஜனாதிபதி இதுவரைக்கும் கண்டிக்கவில்லை

பேசப்படும் ஒரே விடைகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைப்பதற்கு இராணுவத்துடன் சேர்ந்து விதுர விக்கரம நாயக்கதான் முக்கியமாக செயற்பட்டவர் அவ்வாறே மட்டக்களப்பில் குசனார் மலைக்கு அவர் வந்தபோது பாரிய எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தோம் எனவே ஜனாதிபதி ஏன் விக்கரம நாயக்கவை இதுவரைக்கும் கண்டிக்கவில்லை?

உண்மையில் அமைச்சர் விக்கரம நாயக்கவை பதவில் இருந்து விலக்க வேண்டும். ஜனாதிபதி வெறுமனவே பணிப்பாளரை நீக்குவதற்கு காரணம் என்ன?

அவர் உண்மையிலே தீர்மானம் எடுக்க வேண்டுமாயின் விதுர விக்கிரம நாயக்காவை பதவில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.