அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய முல்லைத்தீவு பாடசாலை!

0
449

தமிழர் பகுதியில் இயற்கையான முறையில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபரின் அலுவலகம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மு/சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை எனும் ஆரம்ப பாடசாலையில் உள்ள அதிபரின் அலுவலகமே இவ்வாறு இயற்கை முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கையான முறையில் பாடசாலை சூழல்

இந்த அலுவலகம் முற்று முழுதாக மர வேலைப்பாடுகள் மூலம் இயற்கையான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலை நுழைவாயில் மற்றும் பாடசாலையில் உள்ளே எல்லா வகுப்பறைகளும் மிகவும் நேர்த்தியாகவும் ஸ்மாட் (Smart) வகுப்பறைகளாகவும் அமைந்துள்ளன.

தமிழர் பகுதியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாடசாலை! | The Principal S Office Is Naturally Arranged

இந்த நவீன காலத்தில் இயற்கையின் அருமையை புரிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு பாடசாலை சூழலை பராமரிக்கின்றமை குறித்த பாடசாலைக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Gallery
Gallery