அதிகமாகத் துள்ளாதீர்கள்! – ரணிலின் சகாக்களுக்கு மொட்டு எச்சரிக்கை

0
236

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாவிட்டால் அரசில் இருந்து வெளியேறுவது பற்றி சிந்திக்க நேரிடும் என மொட்டுக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

எங்கள் வாக்குகளால்தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

குடுகாரர்கள் மற்றும் தெருச் சண்டியர்களுக்கு அஞ்சி ஒளியும் நபர்கள் நாங்கள் கிடையாது. எங்கள் வாக்குகளால்தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்.

அதிகமாகத் துள்ளாதீர்கள்! - ரணிலின் சகாக்களுக்கு மொட்டு எச்சரிக்கை | Sri Lankan Political Crisis Ranil Rajapksa Team

அவர் ஜனாதிபதியான பின்னர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கொக்கரிக்க ஆரம்பித்துள்ளனர். அதிகமாகத் துள்ள வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்காக உழைத்தவர்கள்தான் கட்சியின் மாவட்ட தலைவர்கள். அவர்களுக்கு உரிய இடமில்லையேல், அப்படியானதொரு அரசில் இருக்க வேண்டியதில்லை  என்றார்.