இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்தை சுற்றி கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உட்பட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
பொது நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட இந்த தலையீட்டு மனுவில் எக்ஸ் பிரஸ் பேர்ல் பேரழிவின் பின்னர் கோரப்படும் இழப்பீடு கோரிக்கையைச் சுற்றி முறைகேடு, தவறாக கையாளுதல், நாசவேலை, கையூட்டல் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுக்களை மனுதாரர்கள் சுமத்தியுள்ளனர்.
மனுவுக்கு சார்பான சமர்ப்பணங்கள்

அத்துடன் எக்ஸ் பிரஸ் பேர்ல் பேரழிவின் இழப்பீடு கோரிக்கையை சுற்றியுள்ள தலையீடு மற்றும் வெளிப்புற அழுத்தம் பற்றி மனுதார்கள் தரப்புக்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் நாளைய தினத்ததை (15.06.2023) உயர்நீதிமன்றம் மனுவுக்கு சார்பான சமர்ப்பணங்களுக்காக நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.