ரணிலுடன் இந்தியா பயணமாகிறார் அமைச்சர் ஜீவன்

0
232

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 21ம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார்.

இதன்போது இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.