இலங்கை திரும்புவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்த ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கியஸ்தர்

0
192

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலையான சாந்தன் என்ற சுதேந்திரராஜா தாம் இலங்கை திரும்புவதற்கு உதவவேண்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட தனது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

விடுவிக்கப்பட்ட கைதி என்ற நிலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை காட்டிலும் முன்னர் ஆயுள் கைதியாக இருந்தமை சிறப்பாக இருந்தது.

ஏற்கனவே பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் இலங்கையின் உயர்ஸ்தானிகரகம் என்பவற்றுக்கு எனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். எனக்காக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், குரல் கொடுக்கவேண்டும்.

இலங்கை திரும்புவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்த ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கியஸ்தர் | Rajiv Gandhi Suspect Requested To Go Srilanka

கொடுமையான சிறைவாசம்

32 வருடங்களாக எனது அம்மாவை சந்திக்கவில்லை என்ற குற்ற உணர்வும் எனக்கு உண்டு அதிகாரிகள் எங்களை உயிருடன் இருக்க அனுமதித்தனர், ஆனால் வாழ அனுமதிக்கவில்லை.

இதேவேளை என்னுடன் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் அறைகளின் ஜன்னல்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியைக்கூட அவர்களால் பார்க்கமுடியவில்லை.

தொலைபேசிகள் இல்லாமல், இரத்த உறவினர்கள் தவிர வேறு எவரும் தங்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.