தாயின் கண்முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட மகள்; திடுக்கிடும் தகவல்

0
219

வீட்டில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம் செவனகலை பிரதேசத்தில் நேற்று (09) பகலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.லக்சிகா என்ற 22 வயது யுவதியை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த யுவதியின் 22 வயதுடைய முன்னாள் காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் தெரிய வந்தது

குறித்த இளைஞர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து நேற்று மாலை பேருந்தில் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட யுவதியும், கைதான இளைஞரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

கடந்த வருடம் இளைஞருடனான காதலை யுவதி நிறுத்திக்கொண்டுள்ளார்.

தாயின் கண்முன்னே கொல்லப்பட்ட மகள்; விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் | Daughter Killed In Front Of Mother

கழுத்தறுத்துப் படுகொலை

அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே யுவதியை இளைஞர் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர், யுவதியின் தாயாரின் கண் முன்னே இக் கொலையா செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் தந்தை கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் குழு மோதல் ஒன்றில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.