முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக உமாமகேஸ்வரன்

0
222

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ. உமாமகேஸ்வரன் நியமிக்கப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த மாதம் ஓய்வுபெற்றார். இந் நிலையில் பதில் அரசாங்க அதிபராக மேலதிக அரசாங்க அதிபராக இருந்த கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உமாமகேஸ்வரனை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க கனகேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சரவை அனுமதியை பெறுவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக உமாமகேஸ்வரன் | Umamakeswaran As The Ds Of Mullathivu