கஜேந்திரகுமாருக்கு அமெரிக்காவிலிருந்து கிடைத்த ஆதரவு

0
314

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கும் அதேவேளை அவரது கைது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமர் லீ (Summer Lee) தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிற்கு அமெரிக்காவிலிருந்து கிடைத்த ஆதரவு | Congresswoman Summer Lee Gajendrakumar Ponnambalam

அந்த பதிவில்,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, கைது செய்தது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை மௌனமாக்குவதற்கு இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஜனநாயக விரோத மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு இந்த கைது நடவடிக்கை மற்றொரு உதாரணமாகும் என பதிவிட்டுள்ளார். 

https://twitter.com/RepSummerLee/status/1666925869602861058?s=20