பதவியை ராஜினாமா செய்த சரத் பொன்சேகா!

0
334

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முக்கிய பதவியிலிருந்து விலகியுள்ளார்.  தேசிய பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுவிலிருந்து அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவிற்கு பதவி விலகல் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா பதவி விலகியதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.