இயற்கையை ரசிக்க சென்ற ஜோடிக்கு நேர்ந்த துயரம்

0
336

பதுளை கொஸ்லன்ட பகுதியில் இயற்கையை ரசிக்க ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உட தியலும பிரதேசத்தை பார்வையிட வந்து கூடாரமொன்றில் இரவைக் கழித்த யுவதியும் இளைஞனும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

 இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.