யாழ் கிணற்றில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

0
244

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்  உரும்பிராய் பகுதியில் 10-05-2023 இடம்பெற்றுள்ளது.

37 வயதான ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பகுதியில் கிணற்றில் சடலமாக காணப்பட்ட இளம் குடும்பப் பெண்! | Young Family Woman Found Dead In A Well In Jaffna

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் நித்திரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தார் நேற்று காலை எழுந்து பார்த்த வேளை குறித்த பெண்ணை காணவில்லை.

இந்த நிலையில் குடும்பத்தினர் குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து இன்றைய தினம் (11-05-2023)  காலை வீட்டுக்கு அருகே உள்ள கிணறு ஒன்றில் சடலமாக காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாண பகுதியில் கிணற்றில் சடலமாக காணப்பட்ட இளம் குடும்பப் பெண்! | Young Family Woman Found Dead In A Well In Jaffna

கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் உடுவில் பிரதேச செயலகத்தில் கடந்த ஆறு மாத காலமாக காணி பிரிவில் கடமையாற்றி வருகின்றார் என அறிய முடிகின்றது.