மர்ம முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி; பிரதான சந்தேக நபர் கைது

0
292

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, இசுரு உயன பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகி உள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு நேற்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்தில் பிரதான சந்தேக நபர் கைது | Main Suspect Death Of Schoolgirl Has Been Arrested

மேலும் சந்தேக நபரை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.