வடக்கு, கிழக்கிற்கு புதிய ஆளுநர்கள்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்

0
295

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பிய கையோடு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேபோல வடமேல் மற்றும் சபரகமுவ மாகாண ஆளுநர்களாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

முன்னாள் எம்.பிக்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நவீன் திசாநாயக்க, பாலித ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்கள் இவற்றுக்காக பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.