தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் மற்றைய செயலிகளுடன் போட்டி போட்டு வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றது.
மேலும் போட்டி நிறுவனங்களுக்கு மார்க்கெட்டை உடைப்பதற்காகவும் வாட்சப் பயனர்களை அதிகப்படுத்தவும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சமிபத்தில் வாட்சப் நிறுவனம் அதிகமான அப்டேட்களை செய்தது. இதனால் தற்போது வாட்சப்பை பயன்படுத்தவும் இலகுவாக இருக்கின்றது.
இதனை தொடர்ந்து தற்போது நாம் பேசும் Group calls இதற்கு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. இது குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.
32 பேருடன் பேச முடியுமா?
நாம் முதலில் சுமார் 8 பயனர்களுடன் தான் வீடியோ கால் ஒரே நேரத்தில் பேச முடியும். ஆனால் தற்போது உள்ள அப்டேட்களின் படி 32 பயனர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேசலாம். மாறாக இதனை நாம் செல்போனில் செய்ய முடியாது கணணியில் மாத்திரமே செய்ய முடியும்.
இந்த விடயம் குறித்து பேஸ்புக்கில் மார்க் ஜூக்கர்பெக் கூறுகையில். “ தற்போது இருக்கும் விண்டோஸ் இயங்குதளம் அதற்கான புதிய வாட்ஸ்அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
மேலும் 8 பேர் வரை பேசும் வீடியோ கால் தற்போது 32 பேர் வரை பேசலாம் அதே நேரத்தில் வாய்ஸ் காலிலும் இணைந்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதிய இயங்குதளத்தில் உருவாக்கப்படும் வாட்ஸ்அப் போன்களில் பழைய வாட்ஸ்அப் செயலியை விட மிக வேகமாக இயங்கும்.
தொடர்ந்து மற்றைய டிவைஸ்களுடன் வாட்ஸ்அப் இணைப்பதில் இருக்கும் பிரச்சினைகளும் இந்த செயலியில் தீர்வு இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.