அளுத்கம நகரில் இஸ்தபுல்ல வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் புறா கூட்டினை உடைத்து புறாக்களை திருடி கொன்று எரித்து ரிக்ரொக்கில் வீடியோவாக தயாரித்த மூன்று இளைஞர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் குறித்த காணொளியை புறாக்களின் உரிமையாளருக்கு வாட்சப் சமூக வலைத்தளம் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்று நபர்கள் கைது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 மற்றும் 20 வயதுடைய மூன்று நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




