பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி போராட்டம் இடம்பெறவுள்ளது. தலைநகர் பரிசில் இடம்பெற உள்ள போராட்டத்தில் 100,000 பேர் வரை பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தொழிலாளர் தினம் அன்று நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த 13 ஆவது நாள் போராட்டத்தின் போது தலைநகர் பரிசில் 80,000 தொடக்கம் 100,000 பேர் வரை பங்கேற்பார்கள் என உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் பொது போக்குவரத்துக்கள் உள்ளிட்ட சேவைகள் முடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.