மலேசியாவில் உள்ள மொத்த அகதிகளின் எண்ணிக்கை இவ்வளவா? இத்தனை இலங்கையர்களா?

0
322

மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி அந்நாட்டில் மொத்தம் 59 நாடுகளைச் சேர்ந்த 182,990 அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இதில் 74 சதவீதம் பேர் 135,440 பேர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளாக உள்ளனர். மற்ற அனைவரும் புகலிடம் கோரியவர்களாக உள்ளனர்.

இதில் 86.43 சதவீதம் 158,165 பேர் மியான்மர் நாட்டு அகதிகளாக/ புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள அகதிகளின் மொத்த எண்ணிக்கை இவ்வளவா? இலங்கையர்கள் இத்தனை பேரா? | Do You Know How Many Refugees There In Malaysia

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் கணக்குப்படி மலேசியாவில் உள்ள ஒட்டுமொத்த அகதிகள் எண்ணிக்கையில் 58 சதவீதம் பேர் ரோஹிங்கியா அகதிகளாவர்.

இதேவேளை, பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 6,876 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 3,391 பேர், ஏமனை சேர்ந்த 3,346 பேர், சோமாலியாவை சேர்ந்த 3,3033 பேர், சிரியாவைச் சேர்ந்த 2,809 பேர், இலங்கையைச் சேர்ந்த 1,507 பேர், ஈராக்கை சேர்ந்த 750 பேர், பாலஸ்தீனத்தை சேர்ந்த 639 பேர், ஈரானில் இருந்து வெளியேறிய 393 பேர், சூடான் நாட்டவர்கள் 278 பேர் மற்றும் இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்த 1,803 பேர் மலேசியாவில் அகதிகளாக/புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ளனர்.