யாழ் மத்திய சிறையில் நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் கோயிலில் கும்பாபிஷேகம்!

0
232

யாழ் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துடன் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளது.

பிறந்துள்ள சோபகிருது ஆண்டான நேற்றைய நாளில் (14) சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள் இறை வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய சிறைச்சாலையிலுள்ள பிள்ளையார் கோவிலில் குப்பாபிஷேகம்! | Kuppabhishekam Pilliyar Temple Jaffna Central Jail

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் சி.அமரசிங்கத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் குறித்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் யாழ்.கதிரேசன் கோவில் பிரதம குருபாலசுதர்சன் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை மேற்கொண்டதுடன் இந்நிகழ்வில் மேலும் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.