வவுனியா – செட்டிகுளத்தில் திசை மாறும் புத்தர் சிலை விவகாரம்! மனநலம் பாதிக்கப்பட்டவரே காரணம் என தகவல்

0
268

வவுனியா, செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவிற்கிட்பட்ட பழைய தொடருந்து நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் நேற்று (09.04.2023)திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த புத்தர் சிலை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் குறித்த இடத்தில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடு விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனவே இந்த சம்பவத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையும் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.