இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து! 4 பேர் படுகாயம்..

0
291

கம்பஹா மாவட்டம் – மீரிகம – கலேலியா பிரதேசத்தில் பல்வேறு வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் பாரவூர்தி, 08 முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த பாரவூர்தியின் பிரேக்கில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று 08 முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கர விபத்து! 4 பேர் வைத்தியசாலையில் | Gampaha Mirigama Vehicles Accident Four Injured

மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.