அத்துமீறி நுழைந்த சீன போர் கப்பல்களால் பதற்றம்!

0
269

சீனாவின் ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர், 3 போர்க்கப்பல்கள் தைவானில் உள்ள ஒரு தீவை சுற்றி கண்டறியப்பட்டதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்சில் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை தைவான் அதிபர் சாய் இங்-வென் சந்தித்த பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி நுழைந்த சீன போர் கப்பல்களால் பதற்றம்! | Tension With Trespassing Chinese Warships Taiwan

தீவிர கண்காணிப்பு

சீனாவின் இந்த அத்துமீறலை தைவான் அரசு கண்டித்துள்ளதுடன் ஆயுதப்படைகள் நிலைமையை தீவிரமாக கண்காணிப்பதாகவும் விமானங்கள் கடற்படை கப்பல்கள் ரோந்து சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறதாக கூறப்படுகின்றது. சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதும் நிலையில் தைவான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தைவானுக்கு அமெரிக்கா உதவி வருவதனால் தைவானை அச்சுறுத்த சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை எல்லையில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.