மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் 14 வயதான சிறுவன் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கிரிஉல்ல போபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தாயும் இளம் பிள்ளையும் பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி சென்றிருந்துள்ளனர்.
மூத்த சகோதரி குளியல் அறையில் இருந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வரும்போது மகன் ஊஞ்சல் கயிற்றில் இறுகியிருப்பதை கண்டு கயிற்றை அறுத்துள்ள தாய் மகனை தம்பதெனிய வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றுள்ளார்
எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
