கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு; மாணவனால் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல்

0
256

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாணவன் ஒருவன் தன்னுடைய அலைபேசியில் இருந்து போலியான அழைப்பை எடுத்து அச்சுறுத்தல் தகவலை வழங்கியுள்ளான்.

இதனால்14 வயதான அம் மாணவன் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் அவசர பிரிவுக்கு நேற்று (25) மாலை அழைப்பு எடுத்திருந்த மேற்படி மாணவன் இத் தகவலை வழங்கியுள்ளான்

அந்தத் தகவலின் பிரகாரம் உடினடியாக சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

எனினும் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் அழைப்பை எடுத்த அதே மாணவன் “ குண்டு இல்லை. நகைச்சுவைக்காக அழைப்பை எடுத்தே இவ்வாறு பொய் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.

அலைபேசியின் அழைப்பை வைத்து களுபோவில சுனந்தாராம வீதியைச் சேர்ந்த மாணவனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து இதன் பாரிய விளைவுகள் தெரியாமல் அழைப்பை எடுபடுத்தியமையால் கடுமையாக எச்சரித்து மாணவனை விடுவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.