நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கிய போதும் துணிச்சலாக பிரசவம் பார்த்த மருத்துவர்கள் (வைரல்)

0
530

காஷ்மீரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கிய போதும் மருத்துவர்கள் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நிலநடுக்கம் 

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு 6.6 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த தொடர் நிலநடுக்கம் இந்தியாவின் வடமாநிலங்களிலும் உணரப்பட்டது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் ,பஞ்சாப் ,ஹரியானா, டெல்லி மாநிலங்களில் சில இடங்களில் கட்டிடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

பெண்ணிற்கு பிரசவம்

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ,அனந்த்நாக் நகரில் ,நிலநடுக்கங்களுக்கு நடுவே நேற்று இரவு பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் நிலநடுக்கத்தினை பொருட் படுத்தாமல் மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்தனர்.

கட்டிடங்கள் குலுங்கிய நிலையிலும் மருத்துவர்கள் அச்சம் கொள்ளாமல் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.