ஊழியர்களுக்கு 5 ஆண்டு சம்பளத்தை போனஸ் ஆக கொடுக்கும் எவர் க்ரீன் நிறுவனம்

0
319

எவர் க்ரீன் (evergreen) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 52 மாத சம்பளத்தை போனஸ் ஆக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

எவர்க்ரீன் (Evergreen) நிறுவனம் 

தைவான் நாட்டை சேர்ந்த எவர்கிரீன் (evergreen)கார்ப்பரேஷன் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் கடல் வணிகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிறுவனம் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அதன் பங்குகள் விலை 2021ஆம் ஆண்டில் 250% அதிகரித்துள்ளது .கடந்த ஆண்டு மட்டும் சுமார் 16.25 பில்லியன் டாலர் லாபத்தை பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது.

இந்த நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய வளர்ச்சியை ஊழியர்களுடன் கொண்டாடும் வகையில் , 5 வருட சம்பளத்தை போனஸ் ஆக வழங்கி இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பணியில் சேர்ந்த ஓராண்டு மட்டும் நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு கூட 4 ஆண்டுகளுக்கான சம்பளத்தை போனஸ் தொகையாக வழங்கியுள்ளது.

ஓராண்டு நிறைவு பெற்ற ஊழியர்கள் 60 லட்சம் ரூபாய் தொகை வரையிலும் போனஸாக பெறுவார்கள் ,பல ஆண்டுகள் பணியாற்றி வரும் ஊழியர்கள் கோடிக்கணக்கில் போனஸ் பெற்று செல்வார்கள் என தகவல் வெளியாகி வருகின்றது .

கோடிக்கணக்கில் போனஸ் வழங்குவதால் பணியில் சேர இளைஞர்கள் ஆர்வம் 

எவர்கிரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு , உலக அளவில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகின்றது. மற்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இந்த செய்தியை கேட்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள் .

இந்த போனஸ் அறிவிப்பினால், எப்படியாவது எவர் கிரீன் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் இப்போது மட்டுமின்றி 2021 ஆம் ஆண்டிலும் 40 மாத சம்பளத்தை போனஸ் தொகையாக வாரி வழங்கி ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.