இலங்கையில் மிக பெரும் லாபத்தை ஈட்டும் இரு அரச நிறுவனங்கள்!

0
276

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களை ஓரளவு குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்தார்.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனமும், இலங்கை மின்சார சபையும், பெரும் இலாபத்தை ஈட்டுகின்றன என்றும் எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறையில் ஊழல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இலங்கையில் மிகபெரும் லாபத்தை ஈட்டும் இரு அரச நிறுவனங்கள்! | Sri Lanka Electricity Board Is Making Huge Profits

இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் டொலருக்கான தேவை குறைந்துள்ளது என சம்பிக்க தெரிவித்தார்.

ஆகவே வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை செலுத்த ஆரம்பித்தால் அல்லது இறக்குமதியை அனுமதித்தால் டொலரின் மதிப்பு அதிகரிக்கும் என்றும் சம்பிக்க தெரிவித்தார்.