யாழில் தீயில் கருகிய பல்பொருள் விற்பனை மையம்! விஷமிகள் செயலா?

0
299

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி மேற்கில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், கடை பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

கடையின் உரிமையாளர் இன்று (17) காலை வழமை போல விற்பனை நடவடிக்கைக்காக கடையை திறக்க முற்பட்டவேளை கடையானது பகுதி எரிந்து சேதமாகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.