23 வயது இளம் யுவதி மர்மமான முறையில் உயிரிழப்பு!

0
287
The dead woman's body. Focus on hand

விவசாய கிணற்றில் பெண்ணொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்புக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் சகோதரி மாடுகளைப் பார்ப்பதற்காக அருகிலுள்ள வயல் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது தனது மூத்த சகோதரி வீட்டில் இல்லாததால் அவரை தேடியுள்ளார்.

இதன்போது குறித்த யுவதி அங்கிருந்த விவசாய கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.

உயிரிழந்த யுவதி எவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்தார் என்பது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.