வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம் ; நடந்தது தெரியுமா? (Photos)

0
231

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம் ; நடந்தது என்ன? (Photos) | Death Of A Family Caused Great Sadness In Vavuniya

இரு பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உயிரிழப்பு

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம் ; நடந்தது என்ன? (Photos) | Death Of A Family Caused Great Sadness In Vavuniya

இன்று (07) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியபோது அவர் பதிலளிக்கவில்லை.

இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய ஸ்தலத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன்  மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம் ; நடந்தது என்ன? (Photos) | Death Of A Family Caused Great Sadness In Vavuniya
வவுனியாவை உலுக்கிய இளம் குடும்பத்தின் மரணம் ; நடந்தது என்ன? (Photos) | Death Of A Family Caused Great Sadness In Vavuniya

அதேவேளை  இவர்களின் மரணத்திற்கான  காரணம் இன்னும் வெளியாகாத நிலையில்   பச்சிளம் குழந்தைகளுடன் தாய் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.