இதனால்தான் போர் நடத்தப்பட்டது; உண்மையை உடைத்த அதிபர் புடின்!

0
248

உக்ரேனியப் போர் ரஷ்யாவின் உயிர் வாழ்வுக்கான போராட்டம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். நேட்டோவின் அணுவாயுத ஆற்றல் காரணமாக உக்ரேன் மீது படையெடுக்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டாகி இருக்கும் நிலையில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். ரஷ்யா இருக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் வரலாற்றின் முக்கியத் தருணமாக உக்ரேனியப் படையெடுப்பை அவர் வரையறுத்தார்.

இந்நிலையில் ரஷ்ய தேசியத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புட்டின் முன்னைய சோவியத் யூனியனை உடைப்பதும் அதன் முக்கியப் பகுதியான ரஷ்யாவைக் கலைப்பதும் எதிரிகளின் ஒரே குறிக்கோள் என்று குறிப்பிட்டார்.

மேலும் நேட்டோவும் மேற்கத்திய நாடுகளும் அவரது கூற்றை நிராகரித்தன. உலகின் ஆகப்பெரிய மூலப்பொருள் உற்பத்தியாளரான ரஷ்யாவைப் பிளவுபடுத்தி அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே மேற்கத்திய நாடுகளின் நோக்கம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.