ஆப்பிள் போன்கள் வைத்திருக்கும் பயனர்களுக்கு நிறுவன வாரண்டி விதிகள் குறித்து வெளியான தகவல் பிரமிக்க வைத்துள்ளது.
ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள்
பொதுவாக இலத்திரனியல் பொருட்கள் வாங்கும் போது, அதன் வாரண்டி குறித்து வாடிக்கையாளராகிய நாம் அதிக கவனம் செலுத்துவோம்.
இதன்படி, தற்போது இருக்கும் இளைஞர்கள் மற்றைய ஸ்மார்ட் போன்களை விட ஆப்பிள் போன்கள் வைத்திருக்க தான் அதிக நாட்டம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் இது போன்று நிறுவனங்கள் வைத்திருக்கும் சில நிபந்தனைகள் பற்றி வாடிக்கையாளராக இருக்கும் நமக்கு தெரியவதில்லை. இதனாலேயே அந்த பொருளை அல்லது போன்களை பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
அந்தவகையில் அமெரிக்காவில் உள்ள 2007 ஆம் ஆண்டு ஆப்பிளின் மேக்புக்கை பயன்படுத்திய பயனர் ஒருவர் தன்னுடைய போன் அதிகமாக சூடாகிறது என ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்துள்ளார்.
அப்போது குறித்த நிறுவனம் அந்த போனை எடுத்து பிரித்து பார்த்ததில் அவரின் போனில் அதிகமான சிகரெட் புகை படிந்து இருந்ததால் அந்த போனை செய்ய முடியாது என குறித்து ஸ்டோருக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
வழக்கு நிறுவனத்தின் பக்கம் மாற இது தான் காரணமாம்
இதனை தொடர்ந்து குறித்த பயனரின் வாரண்டி மறுக்கப்பட்டதால். அவர் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
அப்போது ஓஷோவில் நடந்த உலக மாநாட்டில் சிலதை வேதியல் பொருட்களை “அபாயகரமான பொருட்கள்” என பட்டியலில் வகைப்படுத்தியுள்ளார்கள்.அதில் சிகரெட்டிலிருந்து வெளிவரும் நிக்கோடினும் ஒன்று.
இது போன்ற படிமங்கள் விற்பனை செய்யப்பட்ட சாதனங்களில் படிந்து இருந்தால் அதற்கு வாரண்டி தர முடியாது என ஆப்பிள் நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த நிலையில் இது போன்ற கேஜெட்டுகள் வருவமாயின் அதனை மனித உயிருக்கு ஆபத்தானது என ஒதுக்கி விடுகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ சிகரெட் குடித்தால் இனி ஆப்பிள் ஸ்மார்ட் போனை தூக்கி குப்பையில் தான் போட வேண்டும்” என கலாய்த்துள்ளார்கள்.