யாழ்ப்பாணத்தில் தமிழில் எழுச்சிப் பாடல் பாடிய சிங்கள அமைச்சர்! (Video)

0
312

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயா ஸ்ரீ ஜெயசேகர தமிழில் எழுச்சிப் பாடல் பாடி தனது உரையை நிகழ்த்தியிருந்தார்.

இந்த நிகழ்வில் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் உதவி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய உறுப்பினர்கள், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து விமர்சனம் தெரிவித்தனர்.  

Video source From Lankasri