யாழில் அண்மையில் திருமணமான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

0
318

மட்டுவில் கனகம்புளியடி சந்தியில் சமிக்சை இன்றி வீதியில் திரும்பிய உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி இரண்டே மாதங்களான தெல்லிப்பழையைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு .

விபத்து

உயிரிழந்த நபரும் அவரது சகோதரனும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கொடிகாமம் சென்று அங்கிருந்து திரும்பி வரும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான சகோதரர்கள் இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.